Search This Blog

19.5.15

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது!

இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களை மூன்று பிரிவாகப் பிரிக்கக் கூறும்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை - கவனம் தேவை!
சமூக நீதிப் போராளிகள் விழிப்போடு இருப்போம்!

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் - மூன்று பிரிவாகப் பிரிக்கக் கூறும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பரிந் துரைகளைச் செயல்படுத்த விரும்பினால் அதில் எக்காரணம் கொண்டும் பொரு ளாதார அளவுகோல் கூடவே கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


மத்திய அரசுக்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையாக, இப்போதுள்ள முறையை மாற்றி (மொத்தம் பொதுவான 27 சதவிகித இடஒதுக்கீட்டுப் பகிர்வை) உட்பிரிவு களாக்கி, அதிக வாய்ப்பற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை மேலும் வாய்ப்புப் பெறும் வகையில் மாற்றி அமைக்கும்படி, அறிக்கை அனுப்பியுள்ள செய்தி  ஊடகங்களில் வந்துள்ளது.

மூன்று வகைப் பிரிவுகள்
இதுபற்றி அதிகார பூர்வமல்லாத செய்திகள் தான் வெளி வந்துள்ளன.
இதில் பல அம்சங்கள் தெளிவாக்கப்படுதல் அவசியமாகும்.
இன்று வெளி வந்துள்ள செய்திப்படி, மூன்று வகையாகப் பிரித்தல் நல்லது;

1.E.B.C. (Extremely Backward Classes) கடைக்கோடி நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட (ஜாதிகள்) வகுப்புகள்.

2. M.B.C. (More Backward Classes) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்.

3. பிற்படுத்தப்பட்டோரில் வளர்ந்த, முன் னேறிய வகுப்புகள் (Backward Classes) என்ற செய்தி வந்துள்ளது.

பன்றி வளர்ப்போர், பாம்பாட்டிகள், பிச்சையில் வாழும் மந்திரவாதி போன்ற நிலையில் உள்ளோர் பாரம்பரிய தொழில் செய்து அடி மட்டத்தில் வாழுவோர், விவசாயக் கூலிகளான வகுப்பினர், படகோட்டி போன்ற ஆதிகால மற்றும் சீர்மரபினர் வாழ்விலிருந்து இன்னமும் மீள முடியாத நிலையில் உள்ள வகுப்பினர் (Aboriginal tribes)


என்று ஒரு பிரிவினை கடைக் கோடி நிலை பிற்படுத்தப்பட்ட வர்களாக அங்கீகரித்து, இடஒதுக்கீட்டில் அவர் களது எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப அளித்தல்.இரண்டாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மூன்றாவது சற்று முன்னேறிய பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற பிரிவு.
எக்காரணத்தைக் கொண்டும் பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது
இதில் எக்காரணத்தைக் கொண்டும் பொரு ளாதார அளவுகோலை உள்ளே நுழைத்து விடக் கூடாது (The Economic Criteria should not be super imposed).
இதற்கு ஒரு பழைய எடுத்துக்காட்டு 1979ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். அரசு ரூ.9,000 ஆண்டு வருமான அளவுகோல் என்ற சமூக நீதித் தத்துவத்திற்கும், நமது அரசியல் சட்டம் வகுத்த நெறிக்கும் முரணாக அரசாணை போட்டது போல், இதில் (Socially and Educationally) 
சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் என்ற அளவுகோல் அடிப்படையில் மட்டுமே (பொதுவாகப் பார்த்தால் ஜாதி அளவுகோல்தான் அது!) பார்த்துப் பிரிக்கப்படல் வேண்டும்.


வேறு குழப்பங்களுக்கு இடம் தரக் கூடாது என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யத்தினையும், மத்திய சமூக நீதி - நலத்துறை அமைச்சகத்தையும், மத்திய அரசினையும் நாம் கேட்டுக் கொள்ளுகிறோம் வலியுறுத்துகிறோம்.

குழப்பிவரும்  பார்ப்பன சக்திகள்

துவக்கத்திலேயே இதனைத் தெளிவுபடுத்துதல் அவசர அவசியம்.
காரணம் உயர்ஜாதி, பார்ப்பனீய ஆதிக்கம் உள்ள ஊடகங்களும், அதிகார வர்க்கமும் பற்பல நேரங்களில் SE-OBC    என்பதை Socially and Economically என்று தவறாக வேண்டுமென்றே திட்டமிட்டு எழுதி, அரசியல் சட்டமோ அதன் கர்த்தாக்களோ (Founding Fathers of the Constitution of India) கூறாததை சந்தடி சாக்கில் உறுதிப்படுத்த அலைகின்றனர்!

இம்மாதிரி பிரிப்பதை, இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்ற உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு (16.11.1992) ஏற்றுள்ளது. சட்டப்படி பிரிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளது. (தனியே அப்பகுதி தரப்பட்டுள்ளது காண்க.)


தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட ஏற்பாடு

எம்.ஜி.ஆர். அரசு தந்த 50 சதவிகிதத்தில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு,  20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் சீர் மரபினருக்கும் என்று  கலைஞர் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு  பிரித்து சாதனை செய்தது!
ஏற்கெனவே தமிழ்நாடு காட்டிய வழியை மேலும் ஒருபடி விரிவாக்கி, தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் மூன்று பிரிவுகளாக்கிப் பரிந்துரை செய்துள்ளனர்.
விழிப்பாக இருப்போம்!
இதில் பொருளாதார குளறுபடிகள் இல்லாமல், அரசியல் சட்ட 15(4) அளவுகோலால் மட்டுமே அளித்து, அவரவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக் குறைவு, தன்மைகளை சீர்தூக்கிப் பார்த்து செய்தால், திராவிடர் கழகம் வரவேற்கும். பொறுத்திருந்து பார்ப்போம் ஒத்த கருத்துள்ள சமூக நீதிப் போராளிகள் விழிப்போடு  என்றும் இருப்போம்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டு களுக்குப்பிறகே அமலுக்கு வந்துள்ள நிலையில், 27 சதவீத இடஒதுக்கீடு அளவை அவர்கள் இன்னும் எட்டாத சூழலில் (வெறும் 7 சதவீதத் துக்கும் கீழ்தான் பெற்றுள்ளனர்) பிற்படுத்தப்பட்ட வர்களைப் பிரிப்பது என்ற பெயரில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 27 சதவீதத்தையும் பெற விடாமல் தட்டிப் பறிக்கும் பொருளாதார அளவுகோல் என்ற கண்ணி வெடியை வைத்தால் நாட்டில் எரிமலை வெடிப்பது தவிர்க்கப்பட முடியாததாகும்.
                    -------------------    கி.வீரமணி- தலைவர் திராவிடர் கழகம்- “விடுதலை”
19.5.2015  


Read more: http://www.viduthalai.in/e-paper/101685.html#ixzz3aagHKS8D

*********************************************************************************
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் 5ஆவது கேள்விக்கு விடையாக இந்த விளக்கத் தினைக் கூறியுள்ளார்கள்.
818. We are of the opinion that there is no constitutional or legal bar to a State categorising  the backward classes as backward and more backward. We are not saying that it ought to be done. We are concerned with the question if a State makes such a categorisation, whether it would be invalid? We think not. Let us take the Criteria evolved by Mandal Commission. Any caste, group or class which scored eleven or more points was treated as a backward class. Now, it is not as if all the several thousands of castes/groups/classes scored identical points.
There may be some castes/groups/classes which have scored points between 20 to 22 and there may be some who have scored points between eleven and thirteen. It cannot reasonably be denied that there is no difference between these two sets of castes/groups/classes. To give an illustration, take two occupational groups viz., gold-smiths and vaddes (traditional stone-cutters in Andhra Pradesh) both included within Other Backward Classes. None can deny that gold-smiths are far less backward than vaddes. If both of them are grouped together and reservation provided, the inevitable result would be that gold-smiths would take away all the reserved posts leaving none for vaddes.
In such a situation, a State al may think it advisable to make a categorisation even among other backward classes so as to ensure that the more backward among the backward classes obtain the benefits intended for them. Where to draw the line and how to effect the sub-classification is, however, a matter for the Commission and the State - and so long as it is reasonably done, the Court may not intervene. In this connection, reference may be made to the categorisation obtaining in Andhra Pradesh. The Backward classes have been divided into four categories.
Group-A comprises of “Aboriginal tribes, Vimukta jatis, Nomadic and semi-nomadic tribes etc”. Group-B comprises professional group like tappers, weavers, carpenters, iron smiths, goldsmiths, kamsalins etc. Group-C pertains to “Scheduled Castes converts to Christianity and their progeny”, while Group-D comprises of all other classes/communities/ groups, which are not included in Groups A,B and C. The 25% vacancies reserved for backward classes are sub-divided between them in proportion to their respective population.
This categorisation was justified in Balram (1972 (3) S.C.R. 247 at 286). This is merely to show that even among backward classes, there can be a sub-classification on a reasonable basis.
819. There is another way of look-grouped together and reservation providing at this issue. Article 16(4) recogonises only one class viz., “backward class of citizens”. It does not speak separately of Scheduled Castes and Scheduled Tribes, as does Article 15(4). Even so, it is beyond controversy that Scheduled Castes and Scheduled Tribes are also included in the expression “backward class of citizens” and that separate reservations can be provided in their favour. It is a well-accepted phenomenon throughout the country.

What is the logic behind it? It is that if Schedule Tribes, Scheduled Castes and Othe Backward Classes are lumped together, O.B.Cs. will take away all the vacancies leaving Scheduled Caste and Scheduled Tribes high and dry The same logic also warrant categorisation as between more backward and backward. We do not mean to say - we may reiterate - that this should be done. We are only saying that if a State chooses to do it, it is not impermissible in Law.
தமிழாக்கம்:


818. மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களை பிரி வினை செய்வதில் எங்கள் கருத்தின்படி  அரசமைப்பு  அல்லது சட்டத்தின்படி தடையானதல்ல. அப்படி வேண்டும் என்றும் கூறவில்லை.   மேலும் அரசு எத் தகையான பிற்படுத்தப்பட்டவர்களுக் கான பிரிவுகளை தயாரித்துள்ளது என்ற கேள்வியை முன்வைக்கிறோம். அந்த அட்டவணை செல்லுபடியாகுமா என் பதை நாங்கள் விவாதிக்கவில்லை.   மண்டல் குழு அறிவுறுத்தலின்படி  எந்த ஜாதி, குழு, வகுப்பாக இருப்பினும் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட புள்ளி களைப் பெற்றிருந்தால் பிற்படுத்தப்பட்ட வர்களாக கருதப்படுவார்கள். அதில் 11லிருந்து 13 புள்ளிகள் பெற்றவர்கள், அதேபோல் எந்த ஜாதி, குழு, வகுப்பாக இருப்பினும் 20லிருந்து 22 புள்ளிகள் பெற்றவர்களாக இரு பிரிவினர் இருந் தாலும், அவர்களுக்குள் வேறுபாடுகள் இருப்பதை மறுக்க முடியாது.  இந்த பிரிவின் கீழ் நாட்டில் உள்ள ஆயிர க்கணக்கான ஜாதிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக ஆந்தி ராவில் உள்ள இரண்டு மிகவும் பிற் படுத்தப்பட்ட ஜாதிகளான தங்க ஆசாரி மற்றும் கற்சிலை செய்பவர்கள் இருவரும் ஒரே பிரிவில் வருகிறார்கள். இவர்களை நாங்கள் தங்க ஆசாரி என்றும் கற்சிலை ஆசாரி என்று பிரித்துப் பார்த்து இருவருக்கும் வேறுபட்ட நீதிவழங்க முடியாது. ஒருவருக்கு ஒரே மாதிரியான இட ஒதுக்கீட்டுக் கொள்கை தான் பொருந்தும். இங்கு தங்க ஆசாரிக்கு எவ் வகையான இட ஒதுக்கீடு கொள் கையோ அதே தான் கற்சிலை ஆசாரி களுக்கும்; இதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினை பரீசிலித்து அதை அட்டவணைப் படுத்துவது மாநில அரசால் அமைக் கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் தான் செயல்படுத் தப்படவேண்டும்.
இந்த விவகாரத்தில் ஆந்திரா அரசு பிற் படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை அட்டவணைப் படுத்துவது தான் முறையான செயலாகும்.  பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் அட்டவணையில் முதல் பிரிவின்  (Group A)  பழங்குடியினர், விமுக்தா பிரிவு ஜாதிகள், நாடோடி மற்றும் தற்காலிகமாக இடம்பெயரும் நாடோடிக்குழுவினர் உள்ளனர். இரண்டாம் பிரிவில் (Group B) பிரிவில் பாரம்பரியமாக செய்துவரும் தொழில் பிரிவின் படி வகுக்கப்பட்ட ஜாதிகள் அதாவது தச்சர், கொல்லர், துணி நெய்யும் நெசவாளர்கள் போன்றோர் அடங்குவர்.
Group C பிற மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவினர் சேர்க்கப்படு வார்கள். எடுத்துக்காட்டாக கிருத்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள்.  Group D இதர அனைத்து பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அடங்குவர். 25 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகைப் பெருக் கத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
(REF Balram 1972 (3) SCR 247 at 286)பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத் தப்பட்ட பிரிவுகளுக் கிடையேயான மேற்கூறிய பிரிவுகள் இப்பிரிவினருக் கான இட ஒதுக்கீட்டு பங்கீடு குறித்த விவகாரத்தில் மிகவும் தெளிவுபடக் கூறியுள்ளது. பிற வகையில் பார்த்தாலும் அரசியல் சாசனச் சட்டம் 16(4) பிரிவு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவு மக்களுக்குத் தேவையான உரிமையை மிகத்தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளது.  எப்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினருக்கான இட ஒதுக் கீட்டுக் கொள்கையில் தெளிவான பிளவுபடாத கொள்கைகள் உள்ளதோ 15(4) அது போலவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்த விதி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தியகுடியுரிமைச் சட்டத்தில் அவர் களுக்கென்று எந்த உரிமைகள் வழங்கப் பட்டுள்ளதோ அது தொடரப்பட வேண்டும். இதில் எந்த ஒரு விவாதமும் செய்யத்தேவையில்லை, தாழ்த்தப்பட்ட, பழங்குடிமக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அவரவர்களுக்கு என அரசியல் சாசனத் தில் கொடுக்கப்பட்ட உரிமைகள் என்றும் தொடரவேண்டும்.
நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வகுக்கப்பட்ட அரசியல் சாசன விதியின் படி பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே யான அட்டவணையில் மாற்றம் செய் வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
*******************************************************************************************************************************************************************

Read more: http://www.viduthalai.in/e-paper/101692.html#ixzz3aagWisdY

0 comments: