Search This Blog

17.7.15

மறைமலை அடிகளார் எழுதியது மெய்யா? - பொய்யா?   


தமிழ்க் கடல் என்றால் அவர் மறைமலை அடிகளார் தான். பேராசிரியர் இலக்கு வனார் சொல்லுவார் - தமிழர் சமுதாயம் என்றால் அதன் தலைவர் தந்தை பெரியார் தான் - தமிழ் என்றாலே - மறைமலைஅடிகள் தான் என்று.

தந்தை பெரியாருக்கும் தமிழ்க் கடலுக்கும் இடையே ஆழமான ஒற்றுமை ஒன்று உண்டு எனில், அது இன எதிரிகளாகிய பார்ப்பன எதிர்ப்புதான் - அதுதான் அவர்கள் இருவரையும் இந்தி எதிர்ப்பு மய்யப் புள்ளியில் ஆசனம் போட்டு அமர வைத்தது. இதோ அடிகளார் பேசுகிறார்.

பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும், ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒரு வகையாகத் தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட் டுக்கு விருந்தினராய்ச் சென் றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்து வைத்து இருக்கிறார்கள். ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும்தாம் உண்டு கழித்த எச்சிற் சோற் றையே புறத்தே வைத்து இருக்கிறார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந் தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிரா மணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினால் தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை. அங் ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல் கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து, அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து, அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமே யல்லாமல், பட்டை பட்டை யாய் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித் துப்பட்டா, பொன் கட்டின உருத்திராச்ச மாலை எல்லாம் அணிந்து கொண்டு, தம் மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப் பாய் நின்று தேவாரம் ஓதுவதும், நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ! என்கிறார் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் 
                   ------------------------------(சாதி வேற்றுமையும் போலிச் சைவமும் எனும் நூலிலிருந்து)

அடிகளார் எழுதியது உண்மை என்பதற்கு அடை யாளம்தான் வ.வே.சு. அய்யர் நடத்திய சேரன்மா தேவி குருகுலம்.

29.4.1925 அன்று திருச்சியில் டாக்டர் பி. வரதராசலு நாயுடு தலைமையில் நடை பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் எம்.கே. ஆச் சார்யா என்ற காங்கிரஸ் பார்ப்பனர் என்ன பேசினார் தெரியுமா?
ஒரு பிராமணச் சிறுவன் ஒரு பிராமணரல்லாத சிறு வனுடன் உட்கார்ந்து சாப் பிட்டதாகக் கேள்வியுற்றால், நான் இதற்காகப் பத்து நாட்கள் பட்டினிக் கிடப்பேன்! என்று சொன்னாரே!
மறைமலை அடிகளார் எழுதியது மெய்யா? - பொய்யா?   

        ------------------------------------------- மயிலாடன் அவர்கள் 16-07-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: